டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.. இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் டிஆர்பியில் போட்டி அதிகமாக இருக்கும். வார வாரம் டாப் 10 இடம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தொடர்ந்து சில வாரங்களாக முதலிடத்திலிருந்து வந்த சிங்க பெண்ணே சீரியல் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இடம் பிடித்துள்ளது. முழு விவரம் இதோ..
1. மூன்று முடிச்சு
2. சிங்க பெண்ணே
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. அன்னம்
7. எதிர்நீச்சல்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. பாக்கியலட்சுமி
10. ராமாயணம்
சில வாரங்களாக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருந்த ராமாயணம் தொடர் தற்போது பின் நோக்கி 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
