கெட்ட பையன் சார் இந்த காளி: இயக்குனர் செல்வராகவன் பதிவு
வலைத்தளங்களில் வாழ்வியல், தத்துவம், போதனை என அவ்வப்போது பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது வெளியிட்டுள்ள தகவல் காண்போம்..
இயக்குனர் செல்வராகவன் ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.
செல்வராகவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ‘ஒரு கையை இழந்த நிலையில் ரஜினி சரத்பாபுவிடம் பேசுவதாக அமைந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார்.
இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லை என்றாலும் பிழைத்துக் கொள்வான், கெட்ட பையன் சார் இந்த காளி’ என்று ரஜினி கூறுவதாக அமைந்த இந்த ஃபேமஸான டயலாக்கை பதிவிட்டுள்ள செல்வராகவன், அந்த கேரக்டர் தான்தான்’ என கேப்ஷனில் கூறியுள்ளார்.
இதன் மூலம் அவர் யாருக்கு மெசேஜ் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக அவர் கூறியபோது, ‘தான் அதிகமான மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால், அவற்றிலிருந்து தான் தற்போது மீண்டு சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறேன்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்த மெசேஜ்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்.
நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டில் திருமணம் செய்து, சில ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ‘மெண்டல் மனதில்’ பட பணியில் ஈடுபட்டுள்ளார்.