15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் இது தான்.. ரம்பா ஓபன் டாக்..!

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ரம்பா.

சுந்தர புருஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம்.
90 களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
தற்போது சினிமாவில் 15 வருடங்கள் வராதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதாவது திருமணமாகி குழந்தைகள் பிறந்தபோது என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதை நினைத்து தான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
