சூப்பர் ஹிட் சீரியல் இரண்டாம் பாகத்துடன் திருமுருகன் மீண்டும் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு என பல சீரியல்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் திருமுருகன்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் விரைவில் புதிய சீரியலை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இவர் இயக்கும் சீரியல் எதிர்நீச்சல் சீரியலுக்கு நிச்சயம் டஃப் கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இப்படியான நிலையில் திருமுருகன் அடுத்ததாக மெட்டி ஒலி சீரியல் இரண்டாம் பாகத்தில் தான் இயக்கப் போவதாக அந்த சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலால் சின்னத்திரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மெட்டி ஒலி சீரியல் பல வருடங்களாக சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.