தெறி பட பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்திருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Theri Movie Song Create New Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தெறி. அட்லி இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இது ஜீவி பிரகாஷ் இசை அமைத்த ஐம்பதாவது திரைப்படமாகும்.

மீண்டும் விஜய்யின் பிகில் படத்தை பார்த்த ராஜபக்சே மகன், அஜித் ரசிகர் வைத்த கோரிக்கையால் முட்டிக் கொண்ட மோதல்.!

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த என் ஜீவன் என்ற பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் பிரகாஷ்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இதற்கென ஒரு ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த பதிவில் தனுஷ் ரசிகர் ஒருவர் காத்தோட சாங் எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஜி.வி விரைவில் என பதிலளித்துள்ளார்.

என் ஜீவன் என்னுடைய பேவரைட் சாங். மீண்டும் விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கிறேன் என இன்னொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின்அடுத்த பாடலுக்கான அறிவிப்பை வெளியிடுங்கள் என சூர்யா ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அருமையான பாடல் கொடுத்ததற்கு நன்றி என இன்னொரு விஜய் ரசிகர் தெரிவித்துள்ளார்.