Rajapaksa Son Watched Bigil
Rajapaksa Son Watched Bigil

மீண்டும் விஜய் பிகில் படத்தை பார்த்த ராஜபக்சே மகனுக்கு அஜித் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Rajapaksa Son Watched Bigil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில்.

தற்போது பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்.!

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் தளபதி விஜயின் பிகில் படத்தை மீண்டும் பார்த்துள்ளார். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதால் பிகில் படத்தை பார்த்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி கூறி வந்தனர். இதற்கிடையே அஜித் ரசிகர் ஒருவர் விசுவாசம் படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்தார்.

அஜித் ரசிகர்கள் பரிந்துரையை பார்த்த விஜய் ரசிகர் அவருக்கு அஜித் என்றாலே யார் என தெரியாது என கிண்டல் அடித்தார். இதனால் மீண்டும் விஜய் அஜீத் ரசிகர்களிடையே மோதல் உருவாகியுள்ளது.