தனுஷின் தேன்மொழி பாடல் குறித்து படக்குழு வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் குறித்து தூள் கிளப்பும் அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதாவது, தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பெற்று இருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தில் குறிப்பாக தனுஷ் வரிகளில் அனிருத் இசையமைப்பில் சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான ‘தேன்மொழி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அனைவரையும் வைபாக்கி பிரபலமானது.

தற்போது வரை அனைவரது ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் இப்பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்காகி வருவதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.