Theatres Owner Decision on Eeshwaran Release

பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை தான் ரிலீஸ் செய்வோம். ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்ளுங்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Theatres Owner Decision on Eeshwaran Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தோடு பொங்கலுக்கு சிம்புவின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தையும் வெளியிட படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என இவ்வளவு நாளாக காத்திருந்த விஜயின் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்போம் என கூறி வருகின்றனர்.

அதாவது பெரும்பாலான திரையரங்குகளில் மாஸ்டர் படத்தைத்தான் ரிலீஸ் செய்வோம். ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தள்ளி போனால் ஜனவரி இறுதியில் சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.