‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநரின் அடுத்த இலக்கு: விஜய் தேவரகொண்டா!

Web Ads

2025-ன் பிளாக்பஸ்டர் படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது ‘வித் லவ்’ (With Love) படத்தின் மூலம் நாயகனாகப் பரிணமித்துள்ள அபிஷன், தனது அடுத்த மெகா புராஜெக்டிற்காகத் தயாராகி வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவிடம் ஒரு கதையைக் கூறியுள்ளதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அபிஷன் இயக்கும் அடுத்த திரைப்படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2

இதுமட்டுமின்றி, முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயனிடமும் அவர் ஒரு கதையைக் கூறியுள்ளாராம். விரைவில் நடிகர் சூர்யாவையும் சந்தித்துக் கதை சொல்லத் திட்டமிட்டுள்ளார். வெறும் இரண்டு படங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்த அபிஷன், இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டார்களுடன் இணையவிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.