சியான் விக்ரமின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் கூட்டணியில் உருவான ‘இருமுகன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இந்த அதிரடி கூட்டணி புதிய படத்திற்காக இணைகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ‘இசை மின்னல்’ ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரம் – ஹாரிஸ் ஜெயராஜ் – ஆனந்த் சங்கர் கூட்டணி இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையும் ஒரு பக்கா கமர்ஷியல் ‘மினிமம் கேரண்டி’ திரைப்படமாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரமின் தற்போதைய ப்ராஜெக்டுகளைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
