சென்சார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. இயக்குனர் நலன் குமாரசாமி சொன்ன பதில்.!!

சென்சார் குறித்த கேள்விக்கு இயக்குனர் நலன் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

The question asked about the censor.. Director Nalan Kumaraswamy's answer.!
The question asked about the censor.. Director Nalan Kumaraswamy’s answer.!

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் ரொம்ப முக்கியம் ஆனால் அது சரியாக இயங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜனநாயகன் குறித்த கேள்விக்கு பொலிடிகல் சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்க அதற்கு அவர் நான் எப்பவுமே பொலிடிகல் பெருசா ஈடுபடமாட்டேன் அதுக்கு கருத்து சொல்லனும்னா இன்னும் ஆழமான கணிப்பு வேண்டும் அதனால் அதைப் பத்தி நான் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The question asked about the censor.. Director Nalan Kumaraswamy's answer.!
The question asked about the censor.. Director Nalan Kumaraswamy’s answer.!