The KFC company that delivered substandard food
The KFC company that delivered substandard food

தரமற்ற உணவை டெலிவரி செய்த கேஎஃப்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறைக்கும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது கே.எப்சி நிறுவனம். கேஎப்சி சிக்கன்களுக்கு அதிகமான உணவு பிரியர்கள் இருந்து வருகின்றனர்.

தரமற்ற சிக்கன்களை சமைத்து விற்பனை செய்யும் ஹோட்டல்களால் சமீப காலங்களாக நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் கேஎஃப்சி நிறுவனம் தரமற்ற உணவை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரின் தயாரிப்பாளருமான விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணா அவர்களின் சகோதரர் சரவணன் என்பவர் தனது குடும்பத்திற்காக வடபழனியில் உள்ள விஜயா மாலில் செயல்பட்டு வரும் கிளையில் கேஎஃப்சி சிக்கனை ஆர்டர் செய்துள்ளார். பிறகு டெலிவரி செய்யப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது.

இந்த உணவை சாப்பிட்ட அவரது குழந்தைக்கு வாந்தி உள்ளிட்ட உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் kfc நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தரமற்ற உணவை விற்பனை செய்த கேஎஃப்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கும் சுகாதாரத்துறைக்கும் மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அசம்பாவிதங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கேஎஃப்சி நிறுவனத்தின் தரமற்ற உணவு குறித்து சரவணன் என்ற வாடிக்கையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.