பிரபலம் நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியனராக திகழக் கூடியவர்கள் தான் நாகார்ஜுனா-அமலா தம்பதி. இதில் நாகார்ஜுனா தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழக்கூடியவர் இவர் பிரபல முன்னணி நடிகையான அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரை உலகில் இருந்து விலகி இருந்த அமலா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் “கணம்” என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் செப்டம்பர் 9தாம் தேதியான நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவரது கணவரான நாகார்ஜுனா நடித்துள்ள பிரம்மஸ்திரா’ என்ற திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருக்கிறது. இப்படி இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.