தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக “தங்கலான்” திரைப்படம் வெளியாக உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி,ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும். என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து வைரலாகி வருகிறது.