இசையமைப்பாளர் தமன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வரை ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது.

வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டம்!!… விஜய் குறித்து தமன் பகிர்ந்திருக்கும் ட்வீட் வைரல்.!

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் அவர்களுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் ஷாம், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன் உட்பட பலர் இணைந்து இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகர் விஜய் குறித்து இசையமைப்பாளர் தமன் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டம்!!… விஜய் குறித்து தமன் பகிர்ந்திருக்கும் ட்வீட் வைரல்.!

அதில் அவர், என்ன ஒரு அற்புதமான தருணம், நன்றி விஜய் அண்ணா இந்த நம்பிக்கையான உயரத்திலிருந்து வெளியேற முடியவில்லை. எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பதிவிட்டு வெளியிட்டு இருக்கிறார்.