கவுண்டமணியின் தாயாரை தளபதி விஜய் நேரில் சந்தித்துள்ளார்.
Thalapathy Vijay With Goundamani Mother : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று வேலாயுதம். மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் தான் கவுண்டமணியின் தாயார் வசித்து வந்தார். இதனை அறிந்த தளபதி விஜய் மோகன் ராஜாவுடன் நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.