Thalapathy Vijay vs Thala Dhoni
Thalapathy Vijay vs Thala Dhoni

தளபதி விஜய்யும் தோனியின் ரசிகர் தான் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thalapathy Vijay vs Thala Dhoni : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடிகர் சதீஷை பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவரிடம் விஜய் மற்றும் தல தோனிக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு சதீஷ் விஜய் சாரும் கிரிக்கெட் நல்லா பார்ப்பாரு. அவரும் ரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பார் அதேபோல் தோனியும் தன்னுடைய ரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பார்.

தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க.. விஜய் ஒரு பைசா கொடுக்கல – வருத்தப்பட்டு பேசிய மாஸ்டர் தயாரிப்பாளர், என்ன நடந்தது தெரியுமா?

விஜய் சாரும் தோனி ரசிகர் தான் என நினைக்கிறேன். அவருடைய மகனும் தோனி ரசிகர் தான். தன்னுடைய மகனுக்காகவே கிரிக்கெட் பார்ப்பதாக விஜய் கூறியதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

பைரவா, கத்தி ஆகிய படங்களின் ஷூட்டிங்கின் போது ஒரே அறையில் அமர்ந்து விஜயுடன் கிரிக்கெட் பார்த்து ரசித்ததாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.