Thalapathy Vijay Photo : நடிகர் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, கதிர், இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

கால் பந்தாட்ட கோச்சரான தனது நண்பன் கதிரை கொன்று விடுவதால் விஜய் அவர்களை பழி வாங்குவது தான் படத்தின் கதை என ஏற்கனவே கசிந்திருந்த நிலையில் தற்போது விஜய் வீல் சேரில் கால்பந்தாட்ட மைதானத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.

அதே சமயம் விஜய் நடந்து வரும் வீடியோ ஒன்றும் வைரலாகிறது. புகைப்படத்தை பார்க்கும் போது இதுதான் கிளைமாக்ஸ் காட்சியா இருக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Thalapathy Vijay Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.