Shah rukh khan
Shah rukh khan

Shah rukh khan :

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாருக்கான் மகள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இதை உறுதிபடுத்தும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற CSK vs KKR ஆட்டத்தை இயக்குனர் அட்லி, ஷாருக்கான் அருகில் அமர்ந்து கண்டு களித்தார்.

இதனால் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்ற பேச்சு மேலும் சூடுபிடிக்கத் துவங்கியது.

ஆனால் உண்மையில் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லையாம். மாறாக ஷாருக்கானுக்காக ஒரு புது கதையை அட்லி தயார் செய்து வருகிறாராம்.

இதற்கான பேச்சுவார்த்தையில்தான் தற்போது இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது மெர்சல் படத்தின் ரீமேக் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அட்லி – ஷாருக்கான் கூட்டணி இணையும் படம் புகழ்பெற்ற டான் படத்தின் மூன்றாம் பாகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த டான் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் பில்லாவாக ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த டான் 3 படம் அஜித்தின் பில்லா 2 பாணியில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.