Vijay Angry
ரசிகர்களின் செயலால் தல அஜித்தை போல தளபதி விஜயும் கொஞ்சம் கடுப்பாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருந்து பிரித்து பார்க்க முடியாத நடிகர்களாக இடம் பிடித்து விட்டவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதிலும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஒருமுறை அஜித் ரசிகர்கள் அஜித்தை பார்த்ததும் அஜித்தே கடவுளே என கோஷம் போட்டனர். இதனால் கடுப்பான தல போட்டோவிற்கு கூட போஸ் கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.

தற்போது அதே போல் சம்பவம் விஜய்க்கும் நடந்துள்ளது. கர்நாடகாவில் தளபதி 64 படப்பிடிப்பில் உள்ள விஜயை பார்த்ததும் ரசிகர்கள் வருங்கால தமிழகமே என கூச்சலிட கடுப்பான விஜய் அதெல்லாம் வேண்டாம் என ரசிகர்களுக்கு கையசைத்து மறுப்பு கூறியுள்ளார்.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.