தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை, லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!
தளபதி 69 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. அனிருத் இசையமைக்க பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் நிலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.