விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது.

Thalapathy 67 Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விஜய்யின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் விஜய். அதன் பின்னர் அட்லி இயக்கத்தில் நடிப்பார் இவரின் இயக்கத்தில் நடிப்பார் என்று பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hu

விக்ரம் படத்தை முழுமையாக முடித்து விட்டு விஜய் உடன் இணைவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.