Thalapathy 65 Opening Song

தளபதி 65 ஓபனிங் சாங் தர லோக்கல் சாங் என தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Opening Song : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

தற்போது தளபதி 65 படத்தின் ஓபனிங் சாங் தர லோக்கலாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தளபதி ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் முன்னதாகவே ரிலீஸ் ஆக வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.