Thalapathy 65 Music Composer Details
Thalapathy 65 Music Composer Details

தளபதி 65 படத்திற்கு 3 இசை அமைப்பாளர்கள் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 65 Music Composer Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பாக்கி 2 படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நாயகிகள், யார் அந்த நடிகைகள் தெரியுமா? – வெளியான மாஸ் தகவல்

இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமன் மட்டும் இல்லை இன்னும் இரண்டு இளம் இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்களாம்.

அவர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் உயர்ந்துள்ளது.