Vijay 65 Movie Heroines
Vijay 65 Movie Heroines

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் இரண்டு நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vijay 65 Movie Heroines : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

சம்பளத்தை உயர்த்த காரணம் இது தான், ஓபனாக பேசிய ராஷ்மிகா.!

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து கசிந்து கொண்டே வருகின்றன.

இந்த படம் துப்பாக்கி 2 ஆக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. 2021-ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.