Rashmika Mandanna Salary : Dear Comrade, geetha govindam, Vijay Deverakonda, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் இணைந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Rashmika Mandanna Salary : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

அந்த படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதே போல் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக இவருக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தியதால் ராஷ்மிக்கா மனிதனா மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருந்துள்ளனர்.

வளர்ந்து வரும் நடிகை தானே இப்படியா சம்பளத்தை உயர்த்துவாங்க என விமர்சித்து வந்தனர்.

இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் சரியான விளக்கம் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. நீங்க வேலை செய்தால் சம்பள உயர்வு, ப்ரோமோஷன் கேட்க மாட்டிங்களா? என்னுடைய முன்னேற்றத்திற்காக தான் சம்பளத்தை உயர்த்தினேன் என கூறியுள்ளார்.

இவர் நடித்து வரும் கன்னட படத்திற்கு ரூ 64 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். இதற்கு முன்னதாக 40 லட்சம் சம்பளம் வாங்கி வந்துள்ளார். இனி நடிக்க போகும் படங்களுக்கு ரூ 60 முதல் 80 லட்சம் வரை சம்பளம் பேசுகிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.