Thalapathy 65 Heroine
Thalapathy 65 Heroine

தளபதி 65 படத்தின் நாயகி யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Thalapathy 65 Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகும் தளபதி – விஜய் 65,66,67 படங்களின் இயக்குனர்கள் யார் தெரியுமா?

ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த இப்படம் கொரானா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய் உள்ளது.

எப்படியும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டிரைலர் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளான அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் இதே தினத்தில் தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த தகவலும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அண்ணாத்த படம் என்னாச்சு?? டி இமான் வெளியிட்ட அறிவிப்பு – வீடியோ உடன் இதோ!

தற்போது இப்படம் பற்றி கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விஜய்க்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.