Vijay 64
தளபதி 64 படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64.

இந்த படத்தை விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வருகிறார். மேலும் லலித் என்பவர் நிர்வாக தயாரிப்பாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது லலித் இணை தயாரிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார், இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து தயாரிப்பாளர் பிரிட்டோ விலகி கொண்டதாக வதந்திகள் பரவிய நிலையில் லலித் தற்போது இணை தயாரிப்பாளராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.