Thalapathy 63

Thalapathy 63 : ரசிகர்களின் தொல்லையால் விஸ்வாசம் படக்குழுவினரின் வழியை பின்பற்ற தளபதி 63 படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருமே தற்போது தங்களின் அடுத்த படங்களில் பிஸியாகி விட்டனர்.

வெறும் 5 நாளில் சர்கார் சாதனையையும் ஓரம் கட்டிய விஸ்வாசம்.!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பென்னி மில்லில் நடைபெற்று வருகிறது.

இதனையறிந்த ரசிகர்கள் பலரும் பென்னி மில்லில் குவியத் தொடங்கியதால் படப்பிடிப்பை நடந்த முடியாமல் படக்குழுவினர் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.

இதனால் இனி இப்படத்தின் படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளனர்.

வருத்தத்துடன் விஜய் பதிவிட்ட ட்வீட் – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் இதே இடத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.