வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் தான் தளபதி விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கி கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

தமன் இசையில் உருவாகும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரும் 27 ஆம் தேதியுடன் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு நடிகர் விஜய் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்த தகவல் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது.