விமான நிலையத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படக்குழு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு தற்போது அடுத்த படப்பிடிப்பிற்காக இன்று காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தளபதி 67 படகுழுவினர்கள் நின்று கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.