Thalaivar167 Darbar :
Thalaivar167 Darbar :

Thalaivar167 Darbar : 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.

தந்தை – மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ரஜினியின் மகளாக ஜில்லா, பாபநாசம் படங்களில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பார் என கூறப்பட்டது. மேலும் நயன்தாரா இப்படத்தில் ரஜினி ஜோடியாக நடிப்பது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பார் என்றொரு தகவல் வெளியாகி தீயாய் பரவியது. ஆனால் அதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் நயன்தாரா மட்டுமே தற்போது வரை இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் மற்ற நடிகர்கள் குறித்த விவரம் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார்.

Thalaivar167 Darbar :
Thalaivar167 Darbar :