லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்த நிலையில் அது நடக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.