தலைவர் 171 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இதை அடுத்து நடிகர் ரஜினி நடிக்க இருக்கும் “தலைவர் 171” திரைப்படம் தொடர்பான அப்டேட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தலைவர் 171” திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெறியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருந்தாலும் இப்படத்தை லோகேஷ் இயக்குவதாக கூறப்படுவதால் தலைவர் 171 LCU -ல் இடம்பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. ஆனால் இந்த படம் LCU-ல் இடம்பெறாது என்றும் இது தனி படம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை வருத்தம் அடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.