Thalaivar 167 : தலைவர் 167 படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

தலைவர் 166 குறித்து வெளியான அதிரடி அப்டேட்ஸ் – ஒன்னு இல்ல 4 அப்டேட்.!

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 167 படத்திற்காக மாஸான போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

யார் பார்த்த வேலை எது என தெரியாமல் உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகின்றனர். லீக்கான புகைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Thalaivar 167 Rajinikanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.