Thala Ajith Cycling Photos

ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்றுள்ளார் நடிகர் தல அஜித். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Thala Ajith Cycling Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து எடிட்டிங் பணிகளை இன்னொரு தொடங்கி இருப்பதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது தல அஜித் ஹைதராபாத்தில் சைக்கிளில் சென்ற புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளன.

இணையத்தில் கசிந்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.