Thala 59

Thala 59 : தல ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள தல 59 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தல அஜித் தற்போது அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிநடை போட்டு வரும் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தல 59 பிங்க் ரி-மேக் தான், ஆனால்? – மரண மாஸான அப்டேட்.!

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்தும் நடைபெற உள்ள இடங்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆம், இப்படத்தின் ஷூட்டிங் வரும் திங்கள் கிழமை முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாம்.

ஒரே செடுலில் தல அஜித் இப்படத்தை படப்பிடிப்புகளை முடித்து கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தல 58, தல 59 இரண்டிலும் – செம மாஸ் காட்டிய ட்வீட்.!

ரசிகர்கள் பலரும் விஸ்வாசம் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் வேளையில் வெளியாகியுள்ள அடுத்த படத்தின் அப்டேட் மேலும் உற்சாகத்தை கூட்டியுள்ளது.a

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.