Tamil Nadu For timber Planting Project : Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil Nadu Goverment

Tamil Nadu For timber Planting Project :

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முதல் மரக்கன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் நட்டு வைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது? இப்படியொரு கவர்ச்சியா? – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், அரசு இடங்கள், வனப்பகுதிகள் ஆகிய அனைத்து இடங்களிலும் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை சமபன்படுத்தி பசுமையை காக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே சுமார் 71 லட்சம் மரக்கன்றுகள் நட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும்,

வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று, சுமார் ரூ198.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.