Tamil Nadu Decision on New Education Policy
Tamil Nadu Decision on New Education Policy

புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டது போல மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது. தொடர்ந்து இரு மொழிக் கொள்கைதான் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Decision on New Education Policy : இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் என அனைத்திலும் ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் வகையில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள முடியாது என பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது. மேலும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமா துறையிலும் இனி இதற்கெல்லாம் தடை இல்லை – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அந்த அறிக்கையில் 80 வருடங்களாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. 23.1.1986 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தமிழக பள்ளிகளில் இந்தி மொழியை நீக்கிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தான் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படியே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் 13.11.1986 இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்தி மொழி பயில விருப்பமில்லாத மாநிலங்களின் மீது அம்மொழியை திணிக்கக் கூடாது என சூளுரைத்தார்

இவ்வாறு புரட்சித் தலைவரும் தலைவியும் இந்தித் திணிப்பை ஆணித்தனமாக எதிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட தலைவர்கள் வழிவந்த அதிமுக அரசும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டதும் அதில் உள்ள மும்மொழிக் கொள்கையை சுட்டிக்காட்டி அதை தீவிரமாக எதிர்த்தது.

26.06.2019 அன்றே இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நான் கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தேன். மாநில அரசு இருமொழிக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றும் என கடந்த சுதந்திர தின விழா உரையில் நான் குறிப்பிட்டு இருந்தேன். அதில் தற்போது வரை உறுதியாக உள்ளோம்.

சினிமா துறையிலும் இனி இதற்கெல்லாம் தடை இல்லை – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

இப்படியான நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிவித்து இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழக மக்களின் விருப்பப்படி இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர், ஓ பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் ( பொறுப்பு ) மதுமதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.