அஜித், சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை என டி ராஜேந்தர் கூறியுள்ளார்.

T Rajendhar About Ajith and Simbu : தமிழகத்தில் நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தளபதி விஜய் உலகநாயகன் கமலஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் காலை 7 மணிக்கு வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் அஜித் இது தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. அதேபோல் நடிகர் சிம்பு அவர்களும் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் டி ராஜேந்தர்.

அதாவது இந்த காலகட்டத்தில் வாக்களிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் மக்கள் கட்டாயம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

சிம்பு விளம்பர படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார் அவரை ஓட்டளிக்க வர வைக்க முயற்சி செய்தும் அவரால் வர முடியாமல் போய்விட்டது என கூறியுள்ளார். அதேபோல் அஜித் வாக்களிக்க வராததற்கு காரணம் கொரானா என கூறியுள்ளார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய வழியை படம் தள்ளிப் போனதற்கும் அதுதான் காரணம் என டி ராஜேந்தர் பேசியுள்ளார். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.