ட்ராப் ஆனதா சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் ட்ராப் ஆனதாக அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் சூரரைப் போற்று என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் கடந்த சில தினங்களாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடி வாசல் திரைப்படம் ட்ராப்பாகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

ஆனால் உண்மையில் வாடிவாசல் திரைப்படம் டிராப் ஆகவில்லை. படம் திட்டமிட்டபடி தொடங்கி ஷூட்டிங் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.