நடிகர் சூர்யா மற்றும் பாலா படத்தில் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya and Bala Movie Heroine Detail : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெய்பீம் என்ற திரைப்படமும் OTT-ல் ரிலீசாக உள்ளது. ‌‌‌‌‌

ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலா ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளார்.

தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்கிறதா? : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தற்போது இந்த படத்தில் ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lion Always A Lion.., Kamal Haasan-ஐ புகழ்ந்து தள்ளிய Director Lokesh Kanagaraj..! | Vikram | Tamil

பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவன் இவன் படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இவர்களது கூட்டணியில் ஒரு படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.