சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

suriya 45 and 46 movies release date update

suriya 45 and 46 movies release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் என்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் முடிந்த கையோடு சூர்யா நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் சூர்யா 46 இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suriya 45 and 46 movies release date update
suriya 45 and 46 movies release date update