சூர்யா 44 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!
சூர்யா 44 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 28ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.