சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கிய பரிசின் புகைப்படத்தை நடிகர் ஜாபர் சாதிக் பகிர்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் வசூலில் தற்போது 500 கோடிகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தில் நடிகர் ஜாபர் சாதிக் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.

அதன்படி, ஜெயிலர் திரைப்படத்தில் உபயோகப்படுத்திய கூலிங் கிளாஸ் ஒன்றை பரிசாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜாபருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஜாபர் சாதிக் அத்துடன் “நான் கேட்டேன் அவர் குடுத்துட்டாரு..” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது