லியோ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Super Star Rajinikanth Review About Leo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ‌.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் முதல் நாளில் கிட்டத்தட்ட 148 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதாக தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

படத்தை பார்த்த ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார் மேலும் ப்ரொடெக்ஷன் வேல்யூ அதிகமாக இருக்கிறது என பாராட்டு தெரிவித்தது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.