Super Star of Tamil Cinema 2019
2019-ன் சூப்பர் ஸ்டார் யார் என நடத்திய ஓட்டெடுப்பின் முடிவுகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக வலம் வருபவர் அஜித், விஜய், ரஜினி ஆகியோர். இவர்களின் படங்கள் தான் மாறி மாறி வசூல் சாதனை படைக்கும்.

2020 தொடங்கி விட்ட நிலையில் கலக்கல் சினிமாவின் யூ ட்யூப், ட்விட்டர், ஹலோ உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தினோம்.

அதில் 2019-ன் சூப்பர் ஸ்டார் யார்? உங்கள் கருத்து என்ற கேள்வியுடன் ரஜினி, விஜய், அஜித் என மூன்று பெயரை ஆப்ஷனாக கொடுத்திருந்தோம்.

தற்போது இந்த ஓட்டெடுப்பு முடிவிற்கு வந்து விட்டது. அதன் முழு விவரங்கள் இதோ

ட்விட்டர் முடிவுகள் :

மொத்தம் 8,245 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என 33.1% ஓட்டளித்துள்ளனர்.

ரஜினியை விஜய் பீட் செய்து விட்டார், 2019-ன் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என 41.4% பேர் வாக்களித்துள்ளனர். இவங்க இரண்டு பேருமே இல்லப்பா எங்க தல தான் என 21.4% பேர் வாக்களிக்க 4.1% ஓட்டுகள் இவங்க யாருமே கிடையாது என பதிவாகியுள்ளது.

ஹலோ முடிவுகள் :

ஹலோ பக்கத்தில் மொத்தத்தில் 8,100 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதில் 57% ஓட்டுகள் தளபதி விஜய்க்கும் 31% ஓட்டுகள் தல அஜித்திற்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு 12% ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

யூ ட்யூப் முடிவுகள் :

மொத்தம் 17,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதில் ரஜினிக்கு 16% ஓட்டுகள் கிடைக்க, தளபதி விஜய்க்கு 53% ஓட்டுகள் கிடைத்துள்ளது. தல அஜித்திற்கு 31% ஓட்டுகள் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.