சிம்பு தயாரிப்பில் STR 50 திரைப்படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! .

சிம்பு பிறந்தநாளில் அடுத்தடுத்து அவர் பட அப்டேட் தொடர்ந்து வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவர் நடிக்கப் போகும் படத்தின் அப்டேட்ஸ் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது இது மட்டுமில்லாமல் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR49 படம் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஆத்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிம்பு STR 50 என்ற படத்தை தயாரித்து நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இறைவனுக்கு நன்றி!
I’m excited to share that I’m stepping into a new journey as a producer with @Atman_cinearts .
There’s no better way to begin this, than with my 50th film, a dream project for both me and @desingh_dp . We are pouring our hearts into this!Excited for this new… pic.twitter.com/j5KLu9X2QW
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
