STR48 படம் குறித்த அப்டேட் கேட்ட ரசிகருக்கு இயக்குனர் கொடுத்திருக்கும் பதில் வைரலாகி வருகிறது.

கோலிவுடில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘பத்து தல’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது அவரது 48வது திரைப்படமாக “STR 48” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் ரசிகர் ஒருவர் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தின் அப்டேட் எப்போ? என்ற கேள்வியை இயக்குனரிடம் ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார். அதற்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விரைவில் வரும் என்று ரீ-ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.