நடிகை திரிஷா கிருஷ்ணன் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் வெள்ளை நிற ஆடையில் ஏஞ்சல் போல் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் திரிஷா பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்களும் ஹாட்டின், ஸ்மைலி உள்ளிட்ட இமேஜ்களுடன் உயிர் உங்களுடையது தேவி.. என கமெண்ட் செய்து லைக்களை குவித்து வருகின்றனர்.